×

முக்கண்ணாமலைப்பட்டியில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, மார்ச் 15: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி முக்கண்ணாமலைப்பட்டியில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமை வகித்தார்.

இந்த முகாமில் ஏற்கனவே புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கியவர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை செல்போன், கணினி மூலம் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது. விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கண்ணாமலைப்பட்டியில் புதிய வாக்களர்களுக்கு வாக்களர் அடையாள அட்டை மற்றும் இணையத்தின் மூலம் பதவிறக்கம் செய்யப்பட்ட அட்டையை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி வழங்கினர். தாசில்தார் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர் மகாலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ராமர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Mukkannamalaipatti ,
× RELATED முக்கண்ணாமலைப்பட்டியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை