தா.பழூரில் தண்டி யாத்திரை நினைவு தின கொண்டாட்டம்

தா.பழூர் மார்ச் 15: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அரசு நேருயுவ கேந்திரா பெரம்பலூர் மாவட்டம் சார்பில் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி தா.பழுரில் நடைபெற்றது.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மூலம் சுதந்திரத்தின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டின் இன்றைய நிலைக்கு பல்வேறு பெரும் தலைவர்களின் போராட்டமும், தியாகமும் முக்கிய காரணம். தலைவர்களின் தியாகங்களை புரிந்து கொண்டு நாட்டின் பண்பாட்டு பெருமைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் செந்தில் குத்துவிளக்கு ஏற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் காந்திஜி, நேதாஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் திரு உருவ படத்திற்கு தீபஒளி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மூலம் பொன்னாடை போற்றி கவுவிக்கப்படுத்தப்பட்டது. முடிவில் தேச பாடல்களுடன் பாத யாத்திரை நடைபெற்றது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: