காளையார்கோவில், ஜூலை 21: அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி வினாடி வினா போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அப்துல்கலாம் 11வது நினைவு தினத்தையொட்டி காளையார்கோவில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இளநிலை மற்றும் உயர்நிலை என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் காளையார்கோவில் மற்றும் கல்லல் ஒன்றியங்களை சேர்ந்த 110 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வரும் அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளைத் தலைவருமான வீரபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி ஆசிரியர்கள் தமிழன்பன், ஆரோக்கிய அனிதா, சாந்தினி தேவி, மோகனா பிரதிபா, கலைச்செல்வி, ஆனந்த பிரபா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லல் கிளைத் தலைவர் தனுசு ஸ்டாலின் வெற்றியாளர்களை அறிவித்து பாராட்டு தெரிவித்தார். இளநிலைப் பிரிவில் பால அமுதன் முதல் இடம் கோகுல்நாத் மற்றும் பெபின் மேத்யூ முறையே இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசு, செசின் திரன் மூன்றாம் இடம் பெற்றனர். உயர்நிலைப் பிரிவில் மாணவி வர்னிகா முதல் இடம், மோகனா மற்றும் யுவன் முறையே இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசு, அஹமது அஃப்சல் மூன்றாம் இடம் பெற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் பிரபு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
