கலெக்டர் தகவல் பெரம்பலூர், குன்னம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும்

பெரம்பலூர்,மார்ச்.15:பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை, ஒரே இடத்தில் அமைக்க அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, அதாவது 4 சட்டமன்ற தேர்தல்களுக்கு இந்த பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள், பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டு சில தேர்தல் நடத்தை விதிகளை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையத்தை குரு ம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூர் (மகளிர்) அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் அமைக்கலாமா என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டரு மான  வெங்கடபிரியா தலைமையில், சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பத்மஜா, சங்கர் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக மேற்கண்ட கல்லூரிகளில் சில தினங்களுக்கு முன்பு நேரடி ஆய்வுகளையும் செய்துள்ளனர்.இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வாக்குகளை பெரம்பலூர் துறை யூர் சாலையில் உள்ள குரு ம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணவும், குன்னம் சட்டமன்றத் தொகுதி வாக்குகளை வேப்பூர்- லப் பைகுடிகாடு சாலையிலுள்ள வேப்பூர் அரசு (மகளிர்) கலைஅறிவியல் கல்லூரி வளாகத்தில் வைத்து எண் ணவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மிகச்சிறிய மா வட்டத்தில் சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்களை அமைத்தால் காவல்துறை சார்பில் அதற்கு தனித்த னியாக 3 அடுக்குப் பாதுகாப்புகளை அளிக்க வேண்டியிருக்கும். அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்குத் தேவையான இடவசதிகளை, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை தனித்தனியாக செய்துதர வேண்டும்.அதேபோல் சிசி டிவி கேமராக்கள் அடங்கிய கட்டுப்பாட்டு அறைகளை தனித்தனியாக வைத்து, மீடியாக்களுக்கு தனித்த னியாகத் தெரிவிக்க வே ண்டியிருக்கும். பத்திரிக்கையாளர்களும் சட்டமன்ற தொகுதி வாக்குஎண்ணிக் கை விபரங்களை அறிய குரும்பலூருக்கும் வேப்பூருக்கும் என 40 கிலோமீட்டர் தூரத்திற்கு அலையவேண் டியதிருக்கும்.

தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தேர்தல் அலுவலர், தேர்தல் தாசில்தார் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அதிகாரிகள் 40 கிமீ தூரத்திற்கு மாறி மாறிச் செல்ல வேண்டியி ருக்கும். இதுபோன்ற அலைச்சல்களைத் தவிர்க்க ஒரே கல்லூரி வளாகத்தில் தனி த்தனிக் கட்டிடங்களில் 2 சட் டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மைய ங்களை அமைத்து ஒரே இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வசதி, சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, மீடியா கண்ட்ரோல் ரூம் என எளிதாக பாதுகா ப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும்.

எனவே பெரம்ப லூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும் கலெக்டருமான  வெங்கடபிரியா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அர சியல் கட்சி பிரதிநிதிகளு டன் ஆலோசனை மேற்கொண்டு அனைவரது ஒப்புதலு டன் ஒரேஇடத்தில் வாக்கு எண்ணும் மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட் சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>