×

கலெக்டர் பங்கேற்பு கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல செடிகள்

கொள்ளிடம். மார்ச் 15: கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள கருவேல முட்செடிகளை விரைந்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் இருந்து சந்தப்படுகை, திட்டுப்படுகை, அளக்குடி வழியாக காட்டூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை வலதுபுற சாலை உள்ளது. இதில் சந்தகை என்ற இடத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரத்தி–்ல் கருவேல முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இரவு நேரங்களில் இந்த ஆற்றங்கரை சாலையில் செல்லும்போது சாலையில் இருபுறமும் நீண்டு வளர்ந்து இருக்கின்ற கருவேல முள் செடிகள் உடல் மற்றும் சட்டைகளில் கிழித்து காயத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களின் போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக இது உள்ளது. எனவே இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தினம்தோறும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kolli ,
× RELATED கொள்ளிடம் கரையோரம் தைல மரத்தோப்பில் தீ