×

கரூர் அரசு காலனி, வாங்கப்பாளைம் பிரிவில் மினி ரவுண்டானா அமைக்க கோரிக்கை

கரூர், மார்ச் 15: கரூர் அரசு காலனி பிரிவு வாங்கப்பாளையம் பிரிவு அருகே வாகன போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மினி ரவுண்டானா அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் பகுதியில் இருந்து அரசு காலனி, வாங்கல், மின்னாம்பள்ளி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் வாங்கப்பாளையம் பிரிவு அருகேயுள்ள வளைவு பாதையின் வழியாக சென்று வருகிறது. இந்த பகுதியில் 3 வழிகளில் போக்குவரத்து நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்லும் வகையில் மினி ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பகுதியில் சிறிய அளவில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Government Colony ,Vangapalayam ,
× RELATED விவசாய விழிப்புணர்வு இயக்க தலைவர்...