×

கரூர் வெங்கமேடு அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் மக்கள்

கரூர், மார்ச் 15: கரூர் வெங்கமேடு அருகே குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையை இந்த பகுதி மக்களே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இதில், பெரும்பாலான தெருக்கள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு விஜபிகள் வருவார்கள் என்பதால், கடந்த சில நாட்களாக நகராட்சி சார்பில் பள்ளமான பகுதிகளை தற்காலிகமாக சரி செய்யும் வகையில் வாகனங்களில் வந்து மண்களை கொட்டிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

மண்கள் மட்டும் கொட்டிவிட்டு சென்று விடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை சரி செய்யும் வகையில் அந்தந்த தெருக்களில் குடியிருக்கும் பொதுமக்களே மண்ணை சமன்படுத்தும் பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். இதே போல், பல்வேறு தெருக்களிலும் இதுமாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karur Vengamedu ,
× RELATED கரூர் வெங்கமேடு அருகே மகள் காதல் திருமணம் தாய் தற்கொலை