×

கரூர் வெங்கடேஷ்வரா பகுதியில் சாக்கடை வடிகாலை ஆழப்படுத்த வேண்டும் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்

கரூர், மார்ச். 15: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியின் வழியாக செல்லும் சாக்கடை வடிகாலை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் இடையே வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதிகள் உள்ளன. நான்கு தெருக்கள் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அவை அனைத்தும் தாழ்வான நிலையில் உள்ளதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, இந்த பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்களை அகலப்படுத்தி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆழப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur Venkateshwara ,
× RELATED தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது