×

உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசுவின் வாழ்க்கை குறிப்பு

உடுமலை, மார்ச் 15: உடுமலை  சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக கே.தென்னரசு  அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 54. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில்  பிஎஸ்சி இயற்பியலும், கோவை அரசு சட்டக்கல்லூரியில் பிஎல்-லும்  படித்துள்ளார். வழக்கறிஞரான இவர், விவசாயம் செய்கிறார். கொங்கு வேளாள கவுண்டரான இவருக்கு செல்வமணி என்ற மனைவியும், விதுவர்மன்(17)  என்ற மகனும் உள்ளனர். 2016-ம்  ஆண்டு முதல் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து  வருகிறார்.

இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், தேர்தல் பொறுப்பாளர் என  கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு பொங்கலூர், மார்ச் 15: பல்லடம் தொகுதிக்கான தேர்தல் செலவின மேலிட பார்வையாளர் சியாம் பிரசாத்  பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்தார். அவரை பல்லடம் வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான தேவராஜ் மற்றும் தேர்தல் பணியாளர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடத்தில் மேலிட பார்வையாளர் ஷியாம் பிரசாத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் செலவினங்கள் பார்வையிடுதல் குறித்தும் கேட்டறிந்து அது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார்.

Tags : Udamai Vol Congressional Candidate ,South Africa ,
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...