குன்னூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல்

குன்னூர், மார்ச் 15: குன்னூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமசந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது குறித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் கூறியதாவது:குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ராமச்சந்திரன்  அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இன்று பகல் 1 மணியளவில் குன்னூர் நகர அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், குன்னூர் லாலி மருத்துவமனை சந்திப்பு முதல் குன்னூர் பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று, குன்னூர் ஆர்டிஒ., அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஊர்வலத்தில் குன்னூர் நகரம், மேலூர் ஒன்றிய கழகங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயல் வீரர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி குழுவினர், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>