×

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.  விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவுகிறது தவெக அரசு.  திமுகவினரை காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும்.

Tags : Vlathikulam Dimuka ,MLA ,Markandeyan ,Dimuka ,Kannada ,Vlathikulam ,Dimuka M. B. Kanimozhi ,Dweka ,Dhimavidar ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...