திருவள்ளுர் மாவட்டத்திற்கு தேர்தல் செலவீன கணக்கு பார்வையாளர்கள் வருகை: பொதுமக்கள், தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்

திருவள்ளூர்:  தழிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 நடைபெறுவதையொட்டி, திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவீன கணக்கு பார்வையாளர்கள் வருகைப் புரிந்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் மூலமாக பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், புகார் அளிக்கும் நபர்களின் விவரங்கள் அனைத்தும் இரகசியம் காக்கப்படும் என்பதை தேர்தல் செலவீன கணக்கு பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 12.03.2021 முதல் 14.03.2021 வரையிலும், 22.03.2021 முதல் 06.04.2021 வரையிலும் மற்றும் 27.05.2021 முதல் 03.06.2021 வரையிலும் ஆகிய தேதிகளில் தேர்தல் செலவீன கணக்கு பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பார்வையாளர்களாக பணியில் இருப்பார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். புகார் நேரில் தெரிவிக்க வேண்டிய முகவரி ஆகியவற்றின் விவரம் வருமாறு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதிகள் - சஞ்சய் முகர்ஜி - 8015234771, வல்லூர், என்டிஇசிஎல் விருந்தினர் மாளிகை.

திருத்தணி, திருவள்ளுர் சட்டமன்றத் தொகுதிகள் - சுதன்சூ ராய் - 8015234772, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை. பூந்தமல்லி, ஆவடி சட்டமன்ற தொகுதிகள்- சொய்க்கன்தாங் - 8015234774, ஆவடி, சிவிஆர்டிஇ விருந்தினர் மாளிகை. மதுரவாயல், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் - மருத் திரிப்பாதி - 8015234775, ஆவடி, சிவிஆர்டிஇ விருந்தினர் மாளிகை. மாதவரம், திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதிகள் - சிவபிரகாஷ் வி.பட்டி - 8015234776, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>