×

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

 

தர்மபுரி, ஜூலை 20: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தலைமையிலான வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் போதை இல்லா தர்மபுரியை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரி அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாநில நிர்வாகி நாகராஜன், முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், சிவலிங்கம், செல்வம், ஸ்ரீதர், மாதேஷ், பூவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர் நகர், பழைய பஸ் நிலையம் வழியாக தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருபோதும் எந்த விதமான போதை பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். போதையில்லா ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மாறுவோம் – மாற்றுவோம் என்ற கோஷங்களை எழுப்பிய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags : Dharmapuri ,We the Leaders ,IPS ,Annamalai ,Government Medical College… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...