×

கும்மிடிப்பூண்டியில் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் நிர்வாகிகளுடன் ஆலோசனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, தேர்வழி, எளாவூர், ஆரம்பாக்கம், கண்ணம்பாக்கம், பல்லவாடா, பாதிரிவேடு, மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். கும்மிடிப்பூண்டி, மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், பெருவாயல் ஷ்யாம், ஒன்றியக் கவுன்சிலர் ஜோதி, அரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் திமுக நிர்வாகிகள் அறிவழகன், அவைத்தலைவர் ரமேஷ், கருணாகரன், தமிழ்சாதிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் திமுக வேட்பாளர் பேசும்போது, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திமுக அதிக வாக்குகள்பெற நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மசூதியில் சென்று அங்கிருந்த குருமார்களிடம் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆசிபெற்றார். பின்னர் தேர்வழி சந்திப்பில் தேர்வழி, வழுதலம்பேடு, ஆத்துப்பாக்கம், அயநெல்லூர், சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட 8 ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதேபோல், ஆரம்பாக்கத்தில் ஒன்றியச் செயலாளர் மணிபாலன் தலைமையில் மாவட்ட நிர்வாகி மணி, தோக்கம்மூர் திமுக நிர்வாகி விஜயகுமார், மனோகரன் அகியோர் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை வரவேற்றனர். இதில் ஆரம்பாக்கத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். தொடர்ந்து மாநெல்லூரில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஊராட்சித்தலைவர் லாரன்ஸ், ஒன்றிய நிர்வாகி ஏசுரத்தினம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையிலும், மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட நிர்வாகி மோகன்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆலோசனை நடத்தினார்.

Tags : DMK ,DJ Govindarajan ,Gummidipoondi ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...