×

சட்டமன்ற தொகுதி வாரியாக விவிபேடு இயந்திரத்துக்கான பேட்டரிகள் அனுப்பி வைப்பு

நாகர்கோவில், மார்ச் 15: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கருத்தில் கொண்டு வாக்கு சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகள் இரண்டு வாக்குசாவடிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் குமரி மாவட்டத்தில் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 2,243 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாக்குசாவடிகள் மொத்தம் 629 இடங்களில் அமைந்துள்ளது. கன்னியாகுமரியில் 417, நாகர்கோவில் தொகுதியில் 390, குளச்சல் 372, பத்மநாபபுரம் 348, விளவங்கோடு 358, கிள்ளியூர் தொகுதியில் 358 வாக்குசாவடிகள் உள்ளன. சட்டமன்றம் மற்றும்  மக்களவைக்கு என தனித்தனி வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேடு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

விவி பேடு கருவி மூலம், தங்கள் வாக்கு சரியாக பதிவாகி உள்ளதா? என்பதை வாக்காளர் அறிய முடியும். வாக்களித்த 7 வினாடிகளில், தங்கள் வாக்கு சரியாக பதிவாகி உள்ளது என்பதை வாக்காளர் உறுதிப்படுத்த முடியும். இந்த விவிபேடு இயந்திரத்தில் பொருத்துவதற்கான பேட்டரிகள், காகிதங்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இவை வாக்குப்பதிவுக்கு முதல் நாள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், விவி பேடு எந்திரத்தில் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...