×

பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜாண் தங்கம் ஓ.பி.எஸ்., இபிஎஸ் அறிவிப்பு

நாகர்கோவில், மார்ச் 15 : குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில், கன்னியாகுமரியில் அதிமுகவும், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோட்டில் பாரதிய ஜனதாவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் யாருக்கு என முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக, மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நேற்று மாலை ஓ.பி.எஸ்., இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டனர். கடையாலுமூடு, சிறுதோட்டத்தை சேர்ந்த டி. ஜாண்தங்கம் பி.ஏ பட்டதாரியாவார். மாணவர் பருவத்திலே அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் அதிமுகவில் மேல்புறம் ஒன்றிய செயலாளர், மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர், குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட  ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

Tags : AIADMK ,John Thangam ,Padmanabhapuram ,EPS ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...