குமரி மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகி திமுகவில் இணைந்தார் கமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

நாகர்கோவில், மார்ச் 15 : குமரி மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட துணை செயலாளர் நாராயணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சுரேஷ்ராஜன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூத், நிர்வாகிகள் தில்லை செல்வம், சிவராஜ், எம்.ஜே.ராஜன், சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் நாராயணன் நிருபர்களிடம் கூறுகையில்,  மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. கட்சி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர் தொகுதிக்கோ,  மாவட்டத்துக்கோ சம்பந்தமில்லாதவராக உள்ளார். மாவட்ட நிர்வாகிகளுக்கே தெரியாமல் வேட்பாளரை அறிவிக்கிறார். 25 ஆண்டுகளாக கமலின் விசுவாசியாக இருந்தேன். கட்சியை பதிவு செய்யும் பிரமாண பத்திரத்தில், குமரி மாவட்டத்தில் இருந்த 2 பேர் கையெழுத்து போட்டோம். அதில் நானும் ஒருவன். கட்சி தலைவரின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தங்க கூண்டில் அடைத்து வைத்தது போல் அவரை யாரும் நெருங்கி பேச முடிய வில்லை. திமுக மீது தான் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், திமுகவில் இணைந்தேன் என்றார்.

Related Stories:

>