திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் வடமலை பாண்டியனுக்கு அமமுகவினர் வரவேற்பு

திருச்செந்தூர், மார்ச் 15: திருச்செந்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் வடமலைபாண்டியனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வடமலை பாண்டியன், ெசன்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து இறங்கினார். இதையடுத்து அவருக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.மனோகரன் தலைமையில்; கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர்கள் பிரசாதம் கொடுத்து பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதை ஏற்றுக்கொண்டு தொகுதிக்கு வந்த வடமலை பாண்டியனுக்கு முக்காணி ரவுண்டானா, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 பின்னர் வீரபாண்டியன்பட்டினம் மணிமண்டபத்தில் உள்ள சிவந்திஆதித்தனார் சிலை, திருச்செந்தூர் பேரூராட்சி எதிரே உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். உறுதியாக  அமோக வெற்றி பெறுவேன்’’ என்றார். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை, சன்னதிதெருவில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை, நடுநாலுமூலைக்கிணறில் அம்பேத்கர் சிலை, பிச்சிவிளை காமராஜர் சிலை, நா.முத்தையாபுரம் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் குலசை, உடன்குடி, மெஞ்ஞானபுரம், காயாமொழி, பூச்சிக்காடு பகுதிகளுக்கு சென்ற அவருக்கு வழி நெடுகிலும் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

 நிகழ்ச்சிகளில் எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர் காசியானந்தம், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் லெனின், ஜெ பேரவை மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச்செயலாளர் இல்லங்குடி, ஒன்றியச் செயலாளர்கள் திருச்செந்தூர் பொன்ராஜ், உடன்குடி அம்மன் நாராயணன், நகரச் செயலாளர்கள்  மணல்மேடு முருகேசன், கோயில்மணி, முருகானந்தம், ஒன்றிய இணைச் செயலாளர் விஜயலட்சுமி, ஹரிகிருஷ்ணன் வடமலைபாண்டியன், பொறியாளர் அணி மாவட்டச் செயலாளர் சார்லஸ், விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், தேமுதிக ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், நகரச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்டப் பிரதிநிதிகள் தாமு, பேராட்சிசெல்வன்,  முன்னாள் கவுன்சிலர் முத்துராமன், அமமுக நகர துணை செயலாளர் சங்கர், இளைஞர் பாசறை நகரத் தலைவர் மாரிமுத்து,  இளைஞர் அணி நகரச் செயலாளர் பாலன், மீனவர் அணி ஒன்றியச் செயலாளர் ஜெஸ்லர், வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் சேகர், தகவல் தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் அப்துல்காதர், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் நயினாமுகமது, பொருளாளர் டேவிட்ராஜ், ஜெ பேரவை மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, நகரச் செயலாளர் ஜோசப், எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் வடிவேல், தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் முத்துபாண்டியன், அவைத்தலைவர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட திரளானோர்  பங்கேற்றனர்.

ஆறுமுகநேரி: ஆத்தூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆழ்வை ஒன்றியச் செயலாளர் ஷேக்தாவூது, நகரச்செயலாளர் முருகானந்தம், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் நகரச் செயலாளர் ராஜகோபால், முன்னாள் பஞ். துணைத்தலைவர் ஆண்டியப்பன் கண்ணன், அமலன், கார்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் தலைமையில் நகரச் செயலாளர் சேகர், மாணவர் அணி ஒன்றியச் செயலாளர் அருண்பாபு, விவசாய அணி மாவட்ட பொருளாளர் ஜெயசங்கர், எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றியச் செயலாளர் தனசேகர், மாவட்டப் பிரதிநிதி ஆறுமுகநயினார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காயல்பட்டினத்தில் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் பாத்திமா, சிறுபான்மையினர் பிரிவு தெற்கு மாவட்டச் செயலாளர் பெத்தப்பா சொளுக்கு, தகவல்தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்காதர், நகர துணைச் செயலாளர் தமீமுல்அன்சாரி, மகளிர் அணி செயலாளர் பகவதி, ஜெ. பேரவை செயலாளர் நைனா முகமது, மீனவர் அணி செயலாளர் மார்டின். துணைச் செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.

Related Stories:

>