×

அரியலூரில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்

அரியலூர், ஜூலை 18: அரியலூர் வ.உ.சி தெருவில் இயங்கி வரும் ஏ. கே.எம் ஐ ஏ எஸ் அகாடமியில்,ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் கோவிந்தபுரம்,அரியலூர் , அரியலூர் சிமெண்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் கங்காமிர்தம் கதிர்வேல் மனிதவள அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் இன்று (18ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இம்மருத்துவ முகாமினைதேசிய சித்த மருத்துவ நிறுவனம் (இந்திய அரசு), தாம்பரம், சென்னை, இயக்குநர் பேராசிரியர் செந்தில் வேல் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள சித்த மருத்துவ முகாமில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் செந்தில்வேல் (சித்தா) தலைமையில் 50க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் பங்கேற்று நுரையீரல் நோய்கள்,

மூட்டுவலி, கழுத்துவலி, நெஞ்சுவலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், மாதவிடாய் பிரச்சினைகள், குழந்தையின்மை, சிறுநீரக கல், மூளை நரம்பு பாதிப்பு (பக்கவாதம்), வயிற்று கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான சித்த மருந்துகள் இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Tags : Free ,Siddha Medical Camp ,Ariyalur ,A. K. M. I. A. S. Academy ,V.O.C. ,Street ,Ramco Cements Limited Govindapuram ,Ariyalur Cement City Lions Association ,Gangamritham Kathirvel Human Resource Foundation ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...