×

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

 

தர்மபுரி, ஜூலை 18:ஆடி பிறப்பு மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரியில் நேற்று அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக அம்மன் திருவீதி உலா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இலக்கியம்பட்டி நாகம்மன் புற்றுகோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் புற்றுக்கு பால் ஊற்றியும், முட்டை வைத்தும் வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் தாலிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அம்மனை வழிபட்டனர். அரசமரத்தடியில் எலுமிச்சையில் விளக்கேற்றினர்.

பக்தர்கள் வேண்டுதலுக்காக கூழ், சுண்டல், பொங்கல் ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினர்.இதே போல், ஆலிவாயன்கொட்டாயில் உள்ள பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags : Amman ,Dharmapuri ,Aadi Birpappa ,Aadi Velli ,Ilakyampatti Salai Mariamman Temple ,Amman… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...