×

கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை நெல்லை, பாளை தொகுதிகளின் வெற்றிக்கனியை ஸ்டாலினிடம் சமர்ப்பிப்போம் வேட்பாளர்கள் அப்துல்வகாப், ஏஎல்எஸ் லட்சுமணன் பேட்டி

நெல்லை, மார்ச் 15: நெல்லை தொகுதியில் திமுக  சார்பில் தற்போதைய எம்எல்ஏவான ஏஎல்எஸ்.லட்சுமணன், பாளை தொகுதியில்  மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும்  சென்னையில் இருந்து நேற்று நெல்லை வந்தனர். பின்னர் நெல்லை மத்திய  மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப.சீத்தாராமன், மாவட்ட துணை செயலாளர் ஆக.மணி, தலைமை  செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிபாண்டியன், கேஆர்.ராஜூ, பொதுக்குழு உறுப்பினர் தர்மன், பகுதி செயலாளர்கள் அண்டன்  செல்லத்துரை, துபை சாகுல், டாக்டர் சங்கர், தொமுச இன்பராஜ், முருகன்,  மகாவிஷ்ணு, பழனியப்பன், மாநகர துணைச் செயலாளர் வள்ளியம்மாள், மாநகர துணை அமைப்பாளர் வக்கீல் கந்தசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் எல்ஐசி  பேச்சிமுத்து, ெநல்லை தொகுதி ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் காசிமணி, வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் கலைசெல்வன், வக்கீல் அலிப் மீரான்,  கேடிசி மாலையப்பன், விவசாய அணி வாசுகி செல்லத்துரை,  நெசவாளரணி அந்தோணி, முன்னாள் கவுன்சிலர் பாலன், சண்முசுந்தரம்,  மதிமுக மின்னல் முகமதுஅலி ஆகியோர் நெல்லை, பாளை தொகுதி திமுக  வேட்பாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பாளை தொகுதி வேட்பாளர் அப்துல்வகாப் நிருபர்களிடம் கூறியதாவது: பாளை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. திமுக தேர்தல் அறிக்கையில் குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், நெல்லை அரசு சித்த  மருத்துவ கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவும், தாமிரபரணியில் கழிவுநீர்  கலப்பதை தடுக்க திட்டம், பாளை திம்மராஜபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு  இலவச பட்டா வழங்குதல், மாநகரில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை  தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம், மானூர் குளத்தில் தண்ணீர் சென்றடையும்  வகையிலான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தேர்தல்  வாக்குறுதியாக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 திமுகவின்  வாக்குறுதிகள்  தேர்தல் கதாநாயகனாக திகழ்கிறது. எனவே திமுகவின் வெற்றி  உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, பாளை தொகுதியில் அமோக வெற்றி பெற்று  வெற்றிக்கனியை ஸ்டாலினிடம் சமர்பிப்பிப்போம் என்றார். நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் கூறுகையில், நான் கடந்த  முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன்.  மக்களுக்கும் திமுக மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட  பணிகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.  திமுக  ஆட்சி அமைந்தவுடன் இந்த சீர்கேடு சரி செய்யப்படும். திமுக தேர்தல்  வாக்குறுதிகள், மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றும் வகையில் உள்ளது. சீவலப்பேரி ஆற்றிலிருந்து மானூர்  குளத்திற்கு  தண்ணீர் கொண்டுவரும் திட்டம் குறித்து நடவடிக்ைக எடுக்கப்படும் என்றார்.

Tags : Abdul Wahab ,ALS ,Lakshmanan ,Karunanidhi ,Stalin ,
× RELATED 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம்...