கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிசெல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை முதல்வராக பாடுபடுவது. கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் செங்குட்டுவன் எம்எல்ஏ., பர்கூர் தொகுதியில் போட்டியிடும் மதியழகன் ஆகியோரையும், ஊத்தங்கரை தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை வெற்றி பெறச் செய்வது.

தேர்தல் ஆணைய உத்தரவு படி 80 வயதானவர்களிடம் விருப்பம் இல்லாமல் தபால் வாக்கு செலுத்த கையெழுத்து பெறுவதற்கு கண்டனம் தெரிவிப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி, கோவிந்தராசன், சாந்தமூர்த்தி, செல்வம், சுவாமிநாதன், பேரூர் செயலாளர்கள் பாபுசிவக்குமார், பாலன், பாபு மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>