டெல்டாவில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு 2,000 டன் நெல் வரத்து

தர்மபுரி, மார்ச் 15: டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் அரசு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பச்சரிசி உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வேண்டிய பச்சரிசிக்கான நெல் டெல்டா மாவட்டங்களிலிருந்து வருகிறது. நேற்று தர்மபுரி மாவட்டத்திற்கு வேண்டிய பச்சரிசிக்கான நெல் தஞ்சாவூரில் இருந்து தர்மபுரி ரயில் நிலையத்திற்கு 42 வேகனில் 2000 டன் நெல் சரக்கு ரயிலில் வந்தது. வந்த நெல்மணிகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்டா மாவட்டங்களிலிருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு நெல் வருகிறது. அந்த வகையில் 2 ஆயிரம் டன் நெல் வந்துள்ளது. மாவட்டத்தில் இயங்கி வரும் நெல் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒப்படைப்பார்கள். ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பச்சரிசி விநியோகம் செய்யப்படுகிறது,’ என்றனர்.

Related Stories:

>