தர்மபுரி கிழக்கு - மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தர்மபுரி, மார்ச் 15:  தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தர்மபுரி தொகுதி வேட்பாளருமான தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், பென்னாகரம் தொகுதி வேட்பாளருமான இன்பசேகரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். வேட்பாளர்கள் பாலக்கோடு முருகன், பாப்பிரெட்டிப்பட்டி டாக்டர் பிரபு ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாதையன், சூடப்பட்டி சுப்ரமணி, நாட்டான் மாது, தங்கமணி, வக்கீல் முனிராஜ், மணி, சந்திரமோகன், வக்கீல் சிவம், முரளி, ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, ஆறுமுகம், சண்முகம், வி.சண்முகம், சித்தார்த்தன், சந்திரமோகன், கோபால், குமரவேல், வேடம்மாள், தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன், அமைப்பாளர்கள் பொன்.மகேஸ்வரன், ராஜா, பழைய தர்மபுரி ஊராட்சி மன்றத்தலைவர் சிவலிங்கம், கிளை செயலாளர் ராஜூ மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றி கதாநாயகன். விவசாயம், தாய்மார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வயதானவர்கள் மற்றும் நீர் ஆதாரங்கள், தொலைநோக்கு திட்டங்கள், வேலைவாய்ப்புகள் போன்ற பல்வேறு வகையான, தமிழக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>