காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், வட்டார தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். கூட்டத்தில், கடந்த 25 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெற்றுத் தராவிட்டால், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உரிய முறையில் அணுகினால், அவர்களுக்கு முழு மனதுடன் தேர்தல் பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>