×

பென்னாகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. நேரில் ஆய்வு

பென்னாகரம், மார்ச் 15:  பென்னாகரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதனையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட உபகரணங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது. அவை சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில், தர்மபுரி மாவட்ட எஸ்பி பிரவேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு மற்றும் வேட்புமனு தாக்கலின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன், பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தரராஜன், தொல்காப்பியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அரூர்: அரூர் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் நேரில் அய்வு செய்தார். அப்போது, அரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளை பார்வையிட்டார். மனு தாக்கலின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கினார். ஆய்வின்போது, அரூர் கோட்டாட்சியர் முத்தையன், டிஎஸ்பி தமிழ்மணி, இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Pennagaram ,S.P. In ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...