ராஜபாளையம் பகுதியில் சுற்றுச்சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

ராஜபாளையம், மார்ச் 15:  ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள எம்.பி.கே. புதுப்பட்டியில் நேற்று 2வது நாளாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், நக்கனேரி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், சுந்தரர் நாச்சியார்புரம், சேத்தூர், வடக்கு தேவதானம், சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியதால் இங்கு போட்டியிடுகிறேன். ராஜபாளையம் பகுதியில் சுற்றுச்சாலை திட்டத்தை செயல்படுத்த நிலங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் பகுதியில் மட்டும் 13 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை கொண்டு வந்துள்ளேன். இன்னும் ஏராளமான பணிகள் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே வாக்காளர்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். சேத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்பேன். தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>