- பொது உறவுகள் முகாம்
- திருவெங்கைவாசல்
- புதுக்கோட்டை
- Ilupur
- தாலுகா
- இலுபூர் வருவாய் பிரிவு
- புதுக்கோட்டை மாவட்டம்
- மாவட்ட சேகரிப்பாளர். ...
புதுக்கோட்டை, ஜூலை 17: திருவேங்கைவாசலில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வருவாய் கோட்டம், இலுப்பூர் தாலுகா, திருவேங்கைவாசல் வருவாய் கிராமத்தில் வரும் 22ம்தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வரும் 15ம்தேதி முதல் திருவேங்கைவாசல் வருவாய் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தில் பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறப்படவுள்ளதால் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
