×

பூட்டிய வீட்டில் தங்க நகை திருட்டு

ராமநாதபுரம், ஜூலை 17: முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து ஒன்பதரை பவுன் தங்க நகை திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பூங்குளத்தை சேர்ந்தவர் மூர்த்தி (62). இவர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் முதுகுளத்தூர் – கடலாடி சாலையோரம் பூங்குளத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியாக வீடு அமைத்து குடியிருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூலை 6ம் தேதி மூர்த்தி தனது குடும்பத்தார்களுடன் சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக சென்று உள்ளார். 10 நாட்கள் கழித்து நேற்று காலையில் வீடு வந்த மூர்த்தி வீட்டின் கதவு திறந்தது கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் வீட்டிற்கு சென்று பீரோவை பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைத்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்க நெக்லஸ், சங்கிலி, மூக்குத்தி உள்ளிட்ட ஒன்பதரை பவுன் தங்க நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து மூர்த்தி பேரையூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ramanathapuram ,Mudukulathur ,Murthy ,Enathi Poongulam ,Tamil Nadu ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...