×

குடிநீர் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

தொண்டி, ஜூலை 17: தொண்டி 5வது வார்டு பகுதிக்கு முறையாக குடி தண்ணீர் வழங்காததை கண்டித்து நேற்று திடீரென காலி குடங்களுடன் பெண்கள் தொண்டி பேரூராட்சியை முற்றுகையிட்டனர். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு பகுதிக்கு கடந்த பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. அதிகாரிகளை சந்தித்து கேட்ட பொழுது, முறையான பதில் அளிக்காமல் டிராக்டர் மூலம் தண்ணீர் தருகிறோம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியதால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை அப்பகுதியில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேருராட்சி பணியாளர்கள் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை படி குடிதண்ணீர் வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.

Tags : Town Panchayat ,Thondi ,Thondi Town Panchayat ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...