சிலுவைப்பாதை வழிபாடு கூட்டுத்திருப்பலி மதுரை பேராயர் பங்கேற்பு

விருதுநகர், மார்ச் 15: விருதுநகர் ஆர்.ஆர் நகரில் உள்ள புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், தவக்கால 4வது ஞாயிறுக்கிழமையான நேற்று, 14 கத்தோலிக்க பங்குகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்ற ஒரு நாள் தியான வழிபாடு நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் 4வது ஞாயிறு ஒரு நாள் தியானத்தை நேற்று காலை ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை அலெக்ஸ் ஞானராஜ் தொடங்கி வைத்தார். நேற்று மாலை விருதுநகர் ஆர்.ஆர்.நகர், பாண்டியன் நகர், நிறைவாழ்வு நகர், சாத்தூர், ஒத்தையால், அருப்புக்கோட்டை, தும்முசின்னம்பட்டி, காரியாபட்டி, சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம், மீனம்பட்டி, வடபட்டி ஆகிய 14 தேவாலயங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்ககள் திருயாத்திரையாக வந்தனர்.  விருதுநகர் மறைவட்டார அதிபர் பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ் தலைமையில் இயேசுவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் 14 தேவாலயங்களின் பங்குத்தந்தையர்கள், துணைப்பங்குத்தந்தையர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More