×

கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை

மதுரை, ஜூலை 17: கஞ்சா கடத்திய வழக்கில் தூத்துக்குடி மற்றும் ஒடிசாவை சேர்ந்த இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு அருகில் கடந்த 2023ம் ஆண்டில் 23 கிலோ கஞ்சாவை உசிலம்பட்டி போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜா, ஒடிசாவை சேர்ந்த சுதேஷ்லிம்மா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயபாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து முத்துராஜா, சுதேஷ்லிம்மா ஆகியோருக்கு தலா தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.சுதாகர் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags : MADURAI ,DISTRICT COURT ,TUTUKUDI ,ODISHA ,Usilampatti Municipal Garbage Warehouse ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...