×

அனுமந்தராயன்கோட்டையில் கருப்புகொடி கட்டி மக்கள் போராட்டம்250 போலீசார் குவிப்பு


சின்னாளபட்டி, மார்ச் 15: குடகனாறு அணை பிரச்சனை சம்பந்தமாக  அனுமந்தராயன்கோட்டை கிராமமக்கள் மீண்டும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 40 துணை ராணுவத்தினர் உட்பட 250 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடகனாற்றில் இருந்து வரும் தண்ணீரை பகிர்ந்தளிக்க தடுப்பணை கட்டியதில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அனுமந்தராயன்கோட்டை மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் கடந்த வருடம் போராட்டங்களை நடத்தினர். ஆத்தூர் எம்எல்ஏ ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தார். இதனை அடுத்து தமிழக அரசு குடகனாறு பிரச்சனைக்கு தீர்வுகாண வல்லுநர் குழுவை அமைத்தது. வல்லுநர் குழுவினர் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மற்றும் தாமரை குளம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்த பின்னர் தங்களுடைய அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பித்தனர். நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில் குடகனாறு பிரச்சனையில் திடீரென்று தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமென்று அனுமந்தராயன்கோட்டை கிராம மக்கள் வீடுகள், கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனையடுத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பெரியசாமி, காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் மத்திய தொழில்நுட்ப பிரிவு துணை ராணுவத்தினர் 40 பேர் மற்றும் 20 சார்பு ஆய்வாளர்கள், 250 போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Anumandarayankottai ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது