×

தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தாலுகா அலுவலகம் முற்றுகை

 

சிங்கம்புணரி, ஜூலை 16: சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் பாலாறு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திருப்பத்தூர் வழியாக ராமநாதபுரம் வரை செல்லும் பாலாற்றின் குறுக்கே, மதுரை மாவட்டம் சூரம்பட்டி பகுதியில் சுமார் ரூ.9 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் தண்ணீரின் அளவு குறைந்து விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, காளாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில், தென் மண்டல நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சியாம் எர்வீன், தாசில்தார் நாகநாதன், பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் தடுப்பணையை 5 அடி உயரத்திற்கு கட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 3 அடி உயரத்திற்கு மட்டுமே தடுப்பணை கட்ட அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Taluga ,Singambunari ,Cheese Farmers Associations ,Singambunari Taluga ,Dindigul ,Madurai ,Sivaganga ,Singampunari ,Balat ,Tirupathur ,Ramanathapuram, Madurai district ,Surambati ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...