×

மாயமான பள்ளி மாணவன் மீட்பு

 

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 16: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் மகன் மனோஜ்குமார்(17). இவர் பி.புதுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால், வீடு திரும்ப வில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் விசாரித்தும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, மாணவனை தேடி வந்த நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள கோயிலில் சுற்றித்திரிவது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் மாணவனை மீட்டு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Pappireddipatti ,Manoj Kumar ,Vinod Kumar ,Irulapatti ,Dharmapuri district ,P.Pudhupatti Government Higher Secondary School ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...