- உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு பேரணி
- தர்மபுரி
- உறுதியளிப்பு ஏற்றுக்கொள்ளும்
- தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்
- குடும்ப நலத்துறை
- மாவட்டம்
- கலெக்டர்
- சரவணன்
தர்மபுரி, ஜூலை 16: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பேரிணியை தொடங்கி வைத்தார். பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குடும்ப நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர். இப்பேரணி புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து, தர்மபுரி பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இக்கருத்தரங்கில் குடும்ப நல விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், ஆணும் -பெண்ணும் சமம், பெண் கல்வியின் முக்கியத்துவம், இளம்வயது திருமணத்தை தவிர்த்தல், இளம்வயது கர்ப்பத்தை தவிர்த்தல், பெண் பாலின விகிதத்தை அதிகரிப்பது மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, துணை இயக்குநர்(குடும்ப நலம்) பாரதி, துணை இயக்குநர்(காசநோய்) பாலசுப்பிரமணியம், துணை இயக்குநர் (தொழுநோய்) விஜயலட்சுமி, புள்ளி விவர உதவியாளர் அம்பிகா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அய்யந்துரை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
