சிவம்பட்டியில் மகளிர் தினவிழா

போச்சம்பள்ளி, மார்ச் 14: மத்தூர் அருகே சிவம்பட்டி கிராமத்தில் தமிழக பெண்கள் இயக்கம், எஸ்இசிஏ கூட்டமைப்பு மற்றும் ரோடு தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன செயலாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பூமணி, புதுயுக தொண்டு நிறுவன செயலாளர் ஷிலா ராமச்சந்திரன், சீடு தொண்டு நிறுவன செயலாளர் சாந்தி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 200 நாட்கள் பணியும், ₹300 ஊதியமும் வழங்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட 50 அம்ச கோரிக்கைகளை அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. கீதா நன்றி கூறினார்.

Related Stories:

>