வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் பிரசாரம்

சிவகிரி, மார்ச் 14: வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக மனோகரன் எம்எல்ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று ராயகிரியில் தேர்தல் பிரசாரத்தை  துவக்கிய அவர் சமுதாய தலைவர்கள், நாட்டாண்மைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். தான் மீண்டும் வாசுதேவநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். வாசுதேவநல்லூர் தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

அவருக்கு ராயகிரி அனைத்து சமுதாய பொதுமக்கள் திரளானோர் சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.பிரசாரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சவுக்கை வெங்கடேசன், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் வாசுதேவநல்லூர் வடக்கு மூர்த்தி பாண்டியன், தெற்கு துரைப்பாண்டியன், மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவர் சசிக்குமார், பேரூர் செயலாளர்கள் ராயகிரி சேவகப்பாண்டியன், வாசுதேவநல்லூர் சீமான் மணிகண்டன், சிவகிரி காசிராஜன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சுமன்,  ராயகிரி பாஜ தலைவர் கணேசன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>