×

கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளராக சீனிவாசன் போட்டி

கோவில்பட்டி, மார்ச் 14: கோவில்பட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக சீனிவாசன் போட்டியிடுகிறார். 57வயதான இவர் எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். தந்தை கிருஷ்ணசாமி. சொந்த ஊர் ஊத்துபட்டி. தற்போது கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு ராம்நகரில் குடியிருந்து வருகிறார். மனைவி குமுதம், இவர்களுக்கு நந்தா, தெரசா என 2 மகள்கள் உள்ளனர். 1979ம் ஆண்டு கட்சியில் சேர்ந்த சீனிவாசன், 10 வருடம் நகர் மன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். மேலும் வாலிபர் சங்க மாவட்ட தலைவர், மார்க்சிஸ்ட் நகர செயலாளர், டிஓய்எப்ஐ ரத்ததான கழக தலைவர், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலகுழு உறுப்பினர், தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கன்வீனர், ஹாக்கி விளையாட்டு கழகம் கன்வீனராக இருந்துள்ளார். தற்போது மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

Tags : Srinivasan ,Kovilpatti ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...