×

க.பரமத்தி அருகே குளத்தூர்பட்டியில் ஆபத்தான சாலை வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

க.பரமத்தி, மார்ச் 14: க.பரமத்தி அருகே குளத்தூர்பட்டி ஆபத்தான வளைவில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தடுப்பு கம்பிகள் அல்லது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சிக்குட்பட்டது குளத்தூர்பட்டி கரூர் சின்னதாராபுரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியே சின்னதாராபுரம் மூலனூர், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில் குளத்தூர்பட்டி மிகவும் ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் அதிக விபத்துகள் நடக்கின்றன. இப்பகுதியில் வளைவு பாதை இருப்பதாலும், சாலைகள் மிகவும் குறுகியதாக இருப்பதாலும் விபத்துக்கள் நடப்பதால் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது தடுப்பு கம்பிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி இந்த வளைவில் விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது.
எனவே குளத்தூர்பட்டி ஆபத்தான வளைவில் விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அல்லது வேகத்தடை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulathurpatti ,K. Paramathi ,
× RELATED பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை