×

கோவை அருகே சூதாட்டம் ஆடிய 10 பெண்கள் கைது

தொண்டாமுத்தூர், ஜூலை 15: கோவை பேரூர் அருகே கரடிமடை அண்ணா நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீஸ் குழுவினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்த நல்லி (48), மணியம்மாள் (52), தங்கம்மாள் (55) செல்வி, சிங்காரி, குமுதா, விமலி, சடைக்கி, ஓலகி உள்பட 10 பேர்களை கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்பராவை பேரூர் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டும், 1350 ரூபாயும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Thondamuthur ,Perur ,Karadimadai Anna Nagar ,Nalli ,Maniammal… ,
× RELATED மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு