×

பரபரப்பு தகவல்கள் மணப்பாறை அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

மணப்பாறை, மார்ச் 14: மணப்பாறை அருகே காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில், உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணா ணது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம்.குளித்தலை அடுத்த மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து எடுக்கப்படும் காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2 மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் துருபிடித்து பழுதாகி இருந்த காரணத்தால் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வந்த குடிநீர் சுமார் 10 அடி தூரத்திற்கு நாலாபக்கமும் பீறிட்டு அடித்தது.

தகவலறிந்து வந்த குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள், குடிநீர் ஏற்றத்தை நிறுத்திய நிலையிலும், குழாயில் சென்ற குடிநீர் சுமார் 2 மணி நேரம் பீறிட்டு அடித்து அருகில் இருந்த கால்வாய்களில் பாய்ந்தது.இதனால், மணப்பாறை பகுதிக்கு செல்லும் 12 லட்சம் லிட்டர் தண்ணீரில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி ஆற்றில் ஓடியது. கடந்த 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டு 2004ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த இரும்பு குழாய்  இடங்களில் துருப்பிடித்து பழுதாகி வருகிறது. கோடைகாலத்தில் ஏற்கனவே தண்ணீருக்கான தேவை அதிகரிக்கும் வேளையில், தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cauvery ,Manapparai ,
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது