×

திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் குமார் வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர், மார்ச் 14:திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் மற்றும் ஒட்டகுடி பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராவணன், திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துகுமார், நிர்வாகிகள் ரத்தினம், அழகர், வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் பொய்கை குடி முருகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த குமாருக்கு அதிமுகவினர் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags : AIADMK ,Kumar ,Vangur ,Thiruverumbur ,
× RELATED பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு...