×

(செய்திஎண்01) வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் நெசவு தொழிலாளி போக்சோவில் கைது ஆரணி அருகே தண்ணீர் கேட்பது போல் நடித்து

ஆரணி, மார்ச் 14: ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த நெசவு தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுமியின் பெற்றோர், சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, நெசல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி லோகநாதன்(40) என்பவர் அங்கு வந்தார். பின்னர், வீட்டின் வெளியே இருந்த சிறுமியிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். அதன்பேரில், சிறுமி தண்ணீர் கொண்டுவர வீட்டிற்குள் சென்றபோது, அங்கு யாரும் இல்லாததை அறிந்த ேலாகநாதன் அவரை பின்தொடர்ந்து சென்றார்.

பின்னர், வீட்டிற்குள் சென்றதும் லோகநாதன் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயார் லோகநாதனின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆரணி மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நெசவு தொழிலாளி லோகநாதனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து லோகநாதனை கைது செய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை சிறையில் அடைத்தனர்.வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தொழிலாளி அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Silmisham ,Pokcho ,Arani ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...