×

(செய்திஎண்05) 150 பெட்டி டெட்டனேட்டர்கள் பறிமுதல் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அதிரடி காட்பாடி-குடியாத்தம் சாலையில்

வேலூர், மார்ச் 14:
வேலூர் காட்பாடியில் குடியாத்தம் செல்லும் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு சோதனையில் 150 பெட்டிகள் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்புக்குழு, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்திலும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்புக்குழு என மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளன.இந்நிலையில் நேற்று காலை காட்பாடி-குடியாத்தம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் நடத்திய வாகன தணிக்கையில் கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூரில் இருந்து மினி லோடு வேனில் 150 பெட்டிகளில் டெட்டனேட்டர்கள் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து வாகனத்துடன், டெட்டனேட்டர்கள் கொண்டு சென்றவர்கள் காட்பாடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் ஆந்திர மாநிலம் கொண்டு செல்லப்படும் டெட்டனேட்டர்களுக்கு உரிய பில், கொண்டு செல்வதற்கான உரிமம் உட்பட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ‘அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே டெட்டனேட்டர்கள் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : News05 ,Level Monitoring Committee ,Godbod-Resurrection Road ,
× RELATED முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்...