தாவரவியல் பூங்காவில் ஜூஸ் விற்பனை துவக்கம்

ஊட்டி, மார்ச் 14: சமவெளிப் பகுதிகளை போன்று நீலகிரி மாவட்டத்திலும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டும் நிலையில், இங்கும் பொதுமக்கள் ஜூஸ், மோர், இளநீர் போன்றவைகளுக்கு மாறிவிட்டடனர்.

வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், தற்போது பெரும்பாலான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிர் பானங்களை தேடிச் செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நிர்வாகம் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்கா வளாகத்திலேயே சிறிய ஜூஸ் கடை ஒன்றை திறந்துள்ளது. ரூ.10க்கு ஜூஸ் விற்கப்படுகிறது. திராட்சை உள்ளிட்ட பல்வேறு ரக ஜூஸ்கள் விற்பனையாகிறது. குறைந்த விலையில் ஜூஸ் கிடைப்பதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதனை வாங்கி பருகுகின்றனர்.

Related Stories:

>