தேவாரம் பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்

தேவாரம், மார்ச் 14: தேவாரம் பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 13.3.2021 மற்றும் 14.3.2021 ஆகிய இரு தினங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்குப்பதிவு  நிலை அலுவலர்கள் மூலமாக, புதிய வாக்காளர்களுக்கு,  இணையதளம் வாயிலாக வாக்காளர் புகைப்பட  அடையாள அட்டை தரவிறக்கம் செய்து வழங்கும் முகாம்  நடைபெற்று வருகிறது. இதனை வாக்காளர்கள் பயன்பெறும் வகையில், நடத்த வேண்டுமென்று, தேனி மாவட்ட  கலெக்டர் கிருஷ்ணண்ணி உத்தரவிட்டார். இதன்படி  தேவாரம் பேருராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிறப்பு  முகாம் நடைபெற்றது. இதில் கம்பம் சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல்  கலந்துகொண்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அட்டைகளை தரவிறக்கம் செய்து வழங்கினார். இந்நிகழ்வின்போது உத்தமபாளையம் வட்டாட்சியர்  உதயராணி, தேவாரம் வருவாய் ஆய்வாளர் காரல்மார்க்ஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: