×

உசிலம்பட்டியில் கோயிலுக்கு திரும்ப வந்த சாமி பெட்டி

உசிலம்பட்டி, மார்ச் 14:  உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டியில் உள்ள ஒச்சாண்டம்மன் கோயிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, பெட்டி எடுக்கும் திருவிழா நடைபெற்றது. இதற்காக உசிலம்பட்டி கருப்புகோயிலிருந்து கடந்த 11ந் தேதி காலை பெட்டி எடுத்து ஒச்சாண்டம்கோயிலுக்கு கொண்டு வந்தனர். சிவராத்திரி திருவிழா முடிந்து மீண்டும் உசிலம்பட்டி கருப்பு கோயிலுக்கு பெட்டி திருப்பி எடுத்து வரப்பட்டது. பூசாரிகள் பெட்டியை தலையில் சுமந்து செல்ல பூசாரி கோடாங்கிகள் மற்றும் பெண் தெய்வங்கள் பூசாரிகளும் சாமியாடி வந்தனர். பாப்பாபட்டியிலிருந்து கொப்பிலிபட்டி, திம்மநத்தம், இஸ்மாயில் மடம், கீரிபட்டி, மேக்கிழார்பட்டி, வடகாட்டுப்பட்டி, அன்னம்பாரிபட்டி வழியாக வத்தலக்குண்டு சாலையில் பெட்டி எடுத்துவரப்பட்டது, இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி நகர் காவல்நிலைய வாசலில் ஆணிச்செருப்பில் ஏறி பூசாரி 500 மீ தூரம் சாமியாடி வந்தார். மற்றொரு பூசாரி கோடாங்கி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.போக்குவரத்து பாதிப்புபெட்டி எடுப்பு திருவிழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர். அடிதடியும் ஏற்பட்டது. மதுரை-தேனி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Sami ,Usilampatti ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...