×

பாங்காக் மதுக்கடையில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு: 22 பேர் கவலைக்கிடம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காகில் உள்ள ‘நா லத்ப்ராவ்’ என்ற மதுக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேடைக்கு அருகில் இருந்த மின்சாதன சர்க்யூட் பிரேக்கரில் ஏற்பட்ட வெடிச்சத்தம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அரங்கம் முழுவதும் இருள் சூழ்ந்ததால், உள்ளே இருந்தவர்களால் அவசர கால வழியைக் கண்டறிய முடியாமல் போனது. மேலும், அடர்ந்த புகை மூட்டமே பெரும்பாலானோரின் மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அவசர கால தீயணைப்பு வழிகள் அடைக்கப்பட்டிருந்ததா மற்றும் ஏதேனும் பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து தாய்லாந்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Bangkok ,Na Latbraw ,Thai ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...