×

திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 61 திட்டங்கள்

சென்னை: காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு, தேர்தல் அறிக்கையில், 61 திட்டங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
* வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.
* வேளச்சேரியில் இருந்து மாமல்லபுரத்துக்கு பறக்கும் விரைவு ரயில் திட்டம்  விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
* வண்டலூர்- வாலாஜாபேட்டை ரயில் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* குன்றத்தூர், மாங்காடு, திருநீர்மலை ஆகிய ஊர்களில் ெசன்னைப் பெருநகர்  குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
* நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பயன்கள் ஆலந்தூர் மற்றும்  பல்லாவரம் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
* காஞ்சிபுரத்தில் அண்ணா நூற்றாண்டு பட்டுப் பூங்கா மீண்டும் செயல்பட  நடவடிக்கை எடுக்கப்படும்.
* காஞ்சிபுரத்திலும், செய்யூரிலும் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
* செய்யூர்- ஆலம்பறை கோட்டை வீடு சுற்றுலா மையம் ஆக்கப்படும்.
* உத்திரமேரூர், குன்றத்தூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர்,  கீழம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் நவீனமயமாக்கப்படும்.
* உத்திரமேரூர், மதுராந்தகம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம்,  சிட்லபாக்கம், குன்றத்தூர், மாங்காடு, கூடுவாஞ்சேரி, நந்திவரம், திருநீர்மலை,  முடிச்சூர், பொழிச்சலூர் ஆகிய ஊர்களில் பாதாள சாக்கடை திட்டம்  நிறைவேற்றப்படும்.
* குன்றத்தூரில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
* ஸ்ரீபெரும்புதூரில் இராமானுஜருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.
* ஸ்ரீபெரும்புதூரில் குளிர்பதனக்கிடங்கு வசதிகள் அமைத்துத் தரப்படும்.
* காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி ெதாடங்கப்படும்.
* வாலாஜாபாத்தில் மீன் சந்தை அமைக்கப்படும்.
* தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் காரப்பேட்டையில் விபத்து சிகிச்சை  பிரிவுடன் அரசு மருத்துவமனை கட்டப்படும்.
* காஞ்சிபுரம் அரசு மருத்துவனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம்  உயர்த்தப்படும்.
* அனாகபுத்தூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும்.
*  திருக்கழுக்குன்றத்தில் பால் கொள்முதல் மையம் அமைக்கப்படும்.
* மெட்ரோ ரயில் சேவை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு  விரிவுபடுத்தப்படும்.
* சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குகடற்கரை சாலை பழைய  மாமல்லபுரம் சாலை ஆகியவற்றில் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* கீழாம்பி, திருமுக்கூடல் ஆகிய ஊர்களில் நெல்கொள்முதல் மையங்கள்  அமைக்கப்படும்.
* பாலாறு குடிநீர்  திட்டம் மறைமலைநகரின் அனைத்து பகுதிகளுக்கும்  விரிவுபடுத்தப்படும்.
* முட்டுக்காடு சுற்றுலா மையம் தரம் உயர்த்தப்படும்.
* காஞ்சிபுரத்தில் காகித ஆலை தொடங்கப்படும்.
* காஞ்சிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
* காஞ்சிபுரம் கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* வேடதாங்கல் பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்பட்டு சர்வேதச சுற்றுலா  மையமாக்கப்படும்.மேலும் பறவைகள் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும்.
* நெம்மேலியில் மீன்களை சேகரித்து பாதுகாப்பதற்காக குளிர் பதன கிடங்கு  அமைக்கப்படும்.
* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மாங்காடு நகருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும்.
* ஆலந்தூர் தொகுதியில் 10 ஊராட்சிகளில் உள்ள பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட  இடங்களில் அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
* மழைக்காலத்தில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் ஆலந்தூர்  தொகுதியில் உள்ள அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மௌலிவாக்கம் ஆகிய  பகுதிகளில் நீர் தோங்காமல் மணப்பாக்கம் கால்வாய் வழியாக வெளியேற  நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கோவூர் ஊராட்சியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு  சுந்தராம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிதிலம் அடைந்துள்ள  தேருக்கு பதில் அறநிலையத்துைறயின் சார்பில் சீரமைத்து புதிய தேர்  அமைக்கப்படும்.
* மணப்பாக்கம் சுடுகாட்டுக்கு ராணுவத்துறையிடம் இருந்து நிலத்தை பெற்று  சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆலந்தூர் தொகுதியில் உள்ள 10 ஊராட்சிளுக்கு கூட்டுகுடிநீர் திட்டம் உருவாக்கி  குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்.
* அய்யன்தாங்கல் போக்குவரத்து பணிமனையில் தரைதளம் அமைத்து  இருக்கைகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்.
* ஆலந்தூர் தொகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ெகருகம்பாக்கம்,  மணப்பாக்கம் சாலையையும், கோவூர், பரணிபுத்தூர் சாலையையும் அகலப்படுத்தி  போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆலந்தூரில் கிறித்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இறந்தவர்களை அடக்கம்  செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு மழைகாலங்களில் தறிக்குழிகளில் தண்ணீர் வந்து  விட்டால் தொழில் செய்ய முடியாமல் சிரமப்படும் நிலையை போக்கிட மழைக்கால  நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.
* ஆலந்தூர் தொகுதி நந்தம்பாக்கத்தில் மத்திய அரசின் ஐடிபிஎல்க்கு சொந்தமான  நிலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஆலந்தூர் தொகுதி திரிசூலம்,  தலக்கணாஞ்சேரி பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை  சுத்திகரித்து பொதுமக்களுக்குவழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆலந்தூர் தொகுதி மாதவபுரத்தில் மழைக்காலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை  வெளியேற்ற கத்திபாரா பாலம் அருேக ஜிஎஸ்டி சாலையில் இரண்டு சிறிய  பாலங்கள் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆலந்தூர் தொகுதி பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரில் மேம்பாலங்கள்  அமைக்கப்படும்.
* மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
* வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் நிலம் பாதுகாக்கப்படுவதுடன்  சர்வதேசப் பறவைகளும் சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்திடும் வகையில்  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* செங்கல்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
* செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம்  உயர்த்தப்படும்.
* பழவேலி-பாலாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஒரகடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆவண செய்யப்படும்.
* தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* சிங்கபெருமாள் கோயில் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இணைக்கப்பட்டு நகராட்சியாக மாற்றப்படும்.
* பாலாற்றில் இருந்து மதுராந்தகத்திற்குக் குடிநீர் வழங்க நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.
* மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
* மெட்ரோ ரயில் சேவை மீனம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை நீட்டிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பறக்கும் ரயில் சேவை வேளச்சேரியில் இருந்து தாம்பரத்திற்கு நீட்டிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* வேளச்சேரி - தாம்பரம் முதன்மை சாலையில் மேடவாக்கம் சந்திப்பிலும்,  வண்டலூர் சாலை-ராஜீவ் காந்தி சாலை சந்திப்பிலும், முகாம் சாலை சந்திப்பிலும்  மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* கேளம்பாக்கம் ஊராட்சியில் ராஜீவ் காந்தி சாலையில் இருந்து வண்டலூர் சாலை  வரையில் சுற்றுப்புறச் சாலை அமைக்கப்படும்.
* செங்கல்பட்டில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி  தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* காஞ்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி
* காஞ்சி, செய்யூரில் சிப்காட் தொழிற்பேட்டைகள்
* முட்டுக்காடு சுற்றுலா மையம் தரம் உயர்த்தப்படும்
* மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி

Tags : DMK ,Assembly ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...